அமெரிக்காவை மையமாகக் கொண்ட பெப்சி கோக் தயாரிப்புகள் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது.. இந்த புறக்கணிப்பின் காரணமாக தமிழக தயாரிப்பான பவண்டோவின் விற்பனை அதிகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
காளிமார்க் நிறுவனத்தின் குளிர்பான தயாரிப்புகளில் ஒன்றுதான் பவண்டோ.. பி.வி.எஸ்.கே. பழனியப்பா நாடார் என்பவரால் 1916-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காளிமார்க் நிறுவனம் நான்கு தலைமுறையாக தொடர்ந்து நடத்தப்படுகிறது..
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தமிழகத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் இந்தியா முழுவதும் குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகம் அறியப்பட்ட ஒன்றாகும்.. 2014-2015 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் அதற்கு முந்தைய ஆண்டை விட பத்து மடங்கு அதிகம்.. இந்நிலையில் பெப்சி கோக் புறக்கணிப்பு மக்களை பவண்டோவை நோக்கி திசை திருப்பும் என்று அதிகம் எதிர்பார்க்கப் படுகிறது.. இது காளிமார்க் நிறுவனத்துக்கு மேலும் வருவாயை ஈட்டித் தரும் என்று பரவலாகப் பேசப்படுகிறது..