தலை இல்லாம உயிர் வாழ முடியுமான்னு யாராவது நம்மள பார்த்து கேட்டா அவங்கள லூசுன்னு நினைப்போம்.. ஏன்னா தலை இல்லாம மனுஷனால உயிர் வாழவே முடியாது.. ஆனா தலையே இல்லாம சில நாட்கள் உயிர் வாழக்கூடிய ஒரு உயிரினம் இருக்கு.. அது என்னனு தெரியுமா?
can humans live without head? |
கரப்பான் பூச்சிதான்.. ஆச்சர்யமா இருக்கா? கரப்பான் பூச்சியால தலை இல்லாம ஒரு நாள் இல்ல அதிக பட்சம் ஒரு வாரம் கூட உயிரோட இருக்க முடியும். எப்புடின்னு கேக்குறீங்களா? கரப்பான் பூச்சி சுவாசிக்கிறதுக்கு அதோட உடம்புல இருக்க சிறு துளைகளே போதும்.. அதனால தலை இல்லைனாலும் ஒரு வாரம் வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம உயிர் வாழ முடியும்.
ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னால அதுனால தன்னுடைய இரையை சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ முடியாது.. அதனாலதான் ஒரு வாரத்துக்கு அப்புறம் இறந்து விடுகிறது.. அது மட்டுமில்ல.. கரப்பான் பூச்சிய பத்தி இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு..
கரப்பான் பூச்சியால 40 நிமிஷம் வரைக்கும் சுவாசிக்காம இருக்க முடியும்.. அத தண்ணிக்குள்ள போட்டாலும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் உயிரோட இருக்கும். அது மட்டுமில்ல கரப்பான் பூச்சியால ஒரு மணி நேரத்துல 3 மைல் தூரம் வரைக்கும் ஓட முடியும்.
அமெரிக்காவோட ராணுவம் ஜப்பான்ல இருக்க ஹிரோஷிமால அணுகுண்டு தாக்குதல் நடத்துனப்ப லட்சக்கணக்கான மக்கள் இறந்தாங்க.. அப்பவும் அழியாத ஒரு உயிரினம்தான் இந்த கரப்பான் பூச்சி!!!
இந்த தகவல் உங்களுக்கு பிடிச்சிருந்தால் உங்க நண்பர்களுக்கும் பகிரவும். இது போல் மேலும் பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ள நம்ம முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்க. நன்றி.
(Summary: Can humans live without head? We all know its impossible, but cockroaches can live even after losing its head. It can survive upto one week without head)
(Summary: Can humans live without head? We all know its impossible, but cockroaches can live even after losing its head. It can survive upto one week without head)