Monday, August 10, 2015

முகநூலில் நம்மை அன்ப்ரண்ட்(Unfriend) செய்தவர்களை கண்டுபிடிக்கும் வழிமுறைகள்!!!

முகநூல்(Facebook) உபயோகிப்பவர்களால் இணைய தளங்களில் அதிகமாக கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று - "என்னை அன்ப்ரண்ட் செய்தவர்கள் யார் யார் என்று கண்டுபிடிப்பது எப்படி?"

இவ்வாறு அன்ப்ரண்ட் செய்தவர்களை பார்க்கும் வசதியை முகநூல் இணையதளம் இதுவரை வழங்கவில்லை.. ஆனாலும் சில இணையதள வல்லுனர்களால் இதற்காக பிரத்யேகமாக "Unfriend notify" என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.




நீங்கள் கணினியில் 'Google Chrome' பிரௌசர் உபயோகபடுத்துவராக இருந்தால் கீழ்க்கண்ட இணைய தளத்திற்கு சென்று அந்த மென்பொருளை உங்கள் பிரௌசரில் பதிவிறக்கம் செய்து நிறுவி கொள்ளவும்..

https://chrome.google.com/webstore/detail/unfriend-notify-for-faceb/ahigpjeolkfgjdaeodlmaceggigbpeoh?hl=en

'Mozilla firefox' பிரௌசர் உபயோகபடுத்துவராக இருந்தால் கீழ்க்கண்ட இணைய தளத்திற்கு சென்று அந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்..

http://formybrowser.com/unfriend-notify

"unfriend notify" மென்பொருளை நிறுவிய(install) பின் உங்களது முகநூல் கணக்கை அந்த பிரவுசரில் இருந்து உபயோகிக்கவும்.. இதன் மூலம் "உங்கள் நண்பர்கள்(Friends list)" பக்கத்தில் புதிதாக "lost friends" என்று ஒரு லிங்க் சேர்க்கப்பட்டுள்ளதை காணலாம்.. அதனை கிளிக் செய்து உங்களை அன்ப்ரண்ட் செய்தவர்கள் பட்டியலை காணலாம்..



இதனை உபயோக படுத்திய பின் கீழே உள்ள பிரிவில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.. நண்பர்களுக்கும் பகிரவும்..

ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்..

Popular Posts